Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி வடகோவை மத்திய உணவுக் கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியில் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.

    கோவை பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல்,  தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பி.முருகன், மாவட்டச் செயலாளர் அ.அஸ்ரப் அலி ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த அமைப்பின் மாவட்டப் பொருளாளர் பி.சற்குணம், துணைச் செயலாளர் என்.செல்வராஜ், கே.எம்.செல்வராஜ், கே.சுப்பிரமணியம், ரவிக்குமார், ஆர்.கணேசன், சசிகுமார், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் யு.கே.சிவஞானம், ராமமூர்த்தி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சுசி.கலையரசன், நிலா மணிமாறன்,  மக்கள் தேசம் கட்சியின் டேனியல் மூர்த்தி, கோவை மணியரசு, பிரேம்குமார், அமல ராபர்ட் உள்ளிட்டோர் மற்றும் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, துணைவேந்தர்  ஏ.கணபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai