Enable Javscript for better performance
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 15th April 2016 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற 3-ஆவது ஆசியக் கோப்பைக்கான கோ-கோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில்  மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் (சிபிஎஸ்இ) பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவர் நவீன் பிரபு பங்கேற்று, சிறப்பாக விளையாடியதற்காக அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

     மத்தியப்பிரதேசத்தில் ஏப்ரல் முதல் வாரம் நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான கோ-கோ போட்டிகளில் 5 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், இந்திய அணியில் தமிழகம் சார்பில் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளி மாணவர் ஐ.நவீன் பிரபு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்று விளையாடினர். இதில், இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.

     இந்திய கோ-கோ அணிக்கு தமிழகத்திலிருந்து தனி நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பாக விளையாடி ஆசியக் கோப்பையை வென்ற மாணவர் நவீன் பிரபுவுக்கு

    பள்ளி நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ், பள்ளி முதல்வர் சுகுணா தேவி, ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai