Enable Javscript for better performance
ஆதரவற்ற குழந்தைகளுடன் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய ஆளுநர்- Dinamani

சுடச்சுட

    

    ஆதரவற்ற குழந்தைகளுடன் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய ஆளுநர்

    By சூலூர்  |   Published on : 15th April 2016 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூர் அருகே பள்ளபாளயம் ராமகிருஷ்ண அசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் வியாழக்கிழமை மேகாலயா ஆளுநர் புத்தாண்டை கொண்டாடினார்.

     மேகாலய ஆளுநர் சண்முகநாதன் பள்ளபாளையம் ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கினார். முன்னதாக விவேகானந்தா பள்ளிமாணவர்கள் வழங்கிய வரவேற்பை ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். ஆசிரமத் தலைவர் ஆத்மானந்தா வரவேற்றார். பொறுப்பாளர் கேசவானந்தா ஆதரவற்ற குழந்தைகளை அறிமுகப்படுத்தினார். ஆசிரம பக்தர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, தேவாரம், திருவாசகம், புறநானூற்றுப் பாடல்களில் உள்ள கருத்துகளை எடுத்துரைத்தார்.

      அப்போது அவர் பேசியதாவது:

     கடவுள் பக்தி என்பது மனிதனை இந்நிலையிலிருந்து அடுத்த உயர்வான நிலைக்கு இட்டுச்செல்வதாக இருக்கவேண்டும். நம் நாட்டில் பல முனிவர்களும், ஞானிகளும் மக்களை மேலான நிலைக்கு எடுத்துச்செல்ல தங்களது வாழ்நாள் முழுதும் பாடுபட்டுள்ளனர். எல்லா மதங்களும் இறுதியில் கடவுளை அடைவதில்தான் முடிகிறது என்கிற உயர்வான கொள்கைகளைக் கொண்டதால்தான் இந்தியா உலகின் குருவாக உள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai