Enable Javscript for better performance
ஈஷா-வில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஈஷா யோக மையத்தில் துன்முகி தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

    ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி திருவுருவச் சிலை முன்பு தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவாரம், திருப்புகழ் பாடல்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து பல்வேறு வாத்தியக் கருவிகள் சங்கமிக்கும் லய வின்யாசம் நிகழ்ச்சியை மாணவர்கள் வழங்கினர். மேலும், வள்ளி திருமணம் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்நாட்டிய நாடகத்தின் கதை, இயக்கம் மற்றும் உருவாக்கம் அனைத்தையும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர் குழுவினரே செய்திருந்தனர். தமிழ்ப் புத்தாண்டையொட்டி தியானலிங்கம் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், லிங்க பைரவி தேவி கோயில் காய்கறிகள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai