Enable Javscript for better performance
கோவை திரையரங்கில் புதிய திரைப்படத்தை விடியோவில் பதிவு செய்தவர்களிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கோவை திரையரங்கில் புதிய திரைப்படத்தை விடியோவில் பதிவு செய்தவர்களிடம் விசாரணை

    By கோவை  |   Published on : 15th April 2016 11:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    theri3xx

    கோவையில் வியாழக்கிழமை வெளியான தெறி திரைப்படத்தை விடியோ கேமிராவில் படம் பிடித்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

     தெறி திரைப்படம் வியாழக்கிழமை காலை கோவையில் சுமார் 20 திரையரங்குகளில்  திரையிடப்பட்டது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள திரையரங்கில் இந்தப் படத்தைக் காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திரையரங்கில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இரு இளைஞர்கள் அந்தப் படத்தை விடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருப்பதைப் பார்த்த ரசிகர்கள் அவர்களை  ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

     விசாரணையில், அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் என தெரிய வந்தது. அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai