Enable Javscript for better performance
தனியார் பள்ளிகள் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்: தலித் அமைப்பு வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகள் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்: தலித் அமைப்பு வலியுறுத்தல்

    By கோவை  |   Published on : 15th April 2016 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என தமிழக தலித் பீப்பிள்ஸ் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.

     தமிழக தலித் பீப்பிள்ஸ் அசோசியேஷன் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

     இந்த அமைப்பின் செயலாளர் எஸ்.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

     கோவை மாவட்டத்தில் உள்ள தனியார், சுயநிதி, சி.பி.எஸ்.இ.பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியரை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க வேண்டும்.

     கோவை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினப் பள்ளிகள் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத பள்ளிகளின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்.

    அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணைப்படி இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7,500 வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் உண்டு, உறைவிட விடுதிகளில் உள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்

    ஆதி திராவிடர் நலத் துறையின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முறையாக ஆய்வு செய்த பின்னரே வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தொழிலாளர் நலத் துறை சட்டவிதிகளின்படி மாத ஊதியம், காப்பீடு, மருத்துவச்  சிகிச்சை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

     தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அபகரித்துள்ளனர். அந்நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai