Enable Javscript for better performance
தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 280 மாணவருக்குப் பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 280 மாணவருக்குப் பணி நியமன ஆணை

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 15th April 2016 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் நஞ்சையா-லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமில் 280 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இக்கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், எல்அன்டு டி, லிப்ரா-பிரிக்கால், எச்சிஎல், ஹூண்டாய் மோட்டார்ஸ், எல்எம்டபுள்யூ, எல்ஜிபி உள்பட 15-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 280 மாணவ,மாணவியர் பல்வேறு பொறியியல் துறைப் பிரிவுகளின் கீழ் பணி நியமனம் பெற தேர்வு செய்யப்பட்டனர்.

    பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சண்முகம் தலைமை வகித்தார். துணை முதல்வர் கெளசல்யா, நிர்வாக அதிகாரி டிடிஎஸ் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 280 மாணவ, மாணவியருக்கு பாலிடெக்னிக் செயலர் முத்துசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இதில், தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள், பாலிடெக்னிக் ஆசிரியர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai