Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு (துர்முகி) பிறப்பையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாட்டுக்காக குவியத் தொடங்கினர். கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

    கோவை புலியகுளம் முந்தி விநாயகருக்குக் காய்கனி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காட்டூர் அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மனுக்கு சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், நகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கோவை பெரிய கடை வீதி மாகாளியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஈச்சனாரி விநாயகருக்கு தங்கக் கவசமும், குங்குமப் பூ அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விஷூ கனி காணலையொட்டி சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், கோவை தண்டுமாரியம்மன், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

    கேரள மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் கோவையில் சித்திரை விஷூவையொட்டி கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தாண்டையொட்டி உறவினர்கள், நண்பர்களுடன் சுற்றுலா மையங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai