Enable Javscript for better performance
தீத்தொண்டு வாரம்: உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    தீத்தொண்டு வாரம்: உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

    By கோவை  |   Published on : 15th April 2016 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீத்தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவையில் வியாழக்கிழமை தொடங்கின.

     நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1944-இல் ஏப்ரல் 14-ஆம் தேதி மும்பை துறைமுகத்தில் எஸ்.எஸ்.போர்ட் ஸ்டிக்கைன் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்தபோது தீயை அணைக்க முயன்ற வீரர்கள் 66 பேர் வெடிவிபத்தில் இறந்தனர். இதையொட்டியே தீத்தடுப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

     அதன்படி, கோவை தெற்குத் தீயணைப்பு நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீத்தொண்டு வார தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மேற்கு மண்டல இணை இயக்குநர் மு.சாகுல் ஹமீது, அங்குள்ள நீத்தார் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து மாவட்ட அலுவலர் எஸ்.ஆர்.சந்திரன், உதவி அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

     அதன்பின்னர், தமிழக தீயணைப்புத் துறையில் 1955-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் பணியின்போது உயிரிழந்த 28 வீரர்களுக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தீத்தொண்டு வாரத்தையொட்டி வரும் 20-ஆம் தேதி வரையிலும் கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடையே தீ விபத்துத் தடுப்புக் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், மருத்துவமனை ஊழியர்கள், அடுக்குமாடிகளில் குடியிருப்போர், தொழிற்சாலைப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மத்தியில் தீத் தடுப்புப் பிரசாரம், செயல் விளக்க நிகழ்ச்சிகள் நடத்த தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை திட்டமிட்டுள்ளது. இதில், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பெ.அண்ணாதுரை, ராமச்சந்திரன், கே.செந்தில்குமார், தெளலத் முஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai