Enable Javscript for better performance
நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

     இக்கூட்டத்தில் பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உமாமகேஷ்வரியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

      தமிழகத்தை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசக் கல்வி அளிக்கப்படும். கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். அரசின் புறம்போக்கு நிலங்கள் மாட்டுப் பண்ணைகளாகவும்,மேய்ச்சல் நிலங்களாகவும் மாற்றப்படும். நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படும்.

     தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட நாம் தமிழர் கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் தமிழர் கட்சியின் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் உமாமகேஷ்வரிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

     வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் சரளாவை ஆதரித்து ஆனைமலையிலும், கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து கிணத்துக்கடவு பகுதியிலும் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai