Enable Javscript for better performance
பெரியநாயக்கன்பாளையத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம்

    By பெ.நா.பாளையம்  |   Published on : 15th April 2016 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தினமணி நாளிதழ் சார்பில் பெரியநாயக்கன்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தினமணி நாளிதழ், கோவை மாவட்ட நிர்வாகம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, அன்னைக் கரங்கள் ரத்த தான பொதுநலச் சங்கம், கீர்த்தி சக்ரா நாயக் கண்ணாளன் கென்னடி நினைவு நண்பர்கள் அமைப்பு ஆகியன சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதற்கு, ஏவிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கல்வித் துறை இயக்குநர்கள் டாக்டர்.வெங்கடேஷ்வரன், குணசேகரன், முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

    இதில், பெ.நா.பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கல்பனா, கென்னடி கேஸ் அண்ணாதுரை, ஹரிப்பிரியா புருஷோத்தமன், ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் என்.பாலமூர்த்தி, கவுன்சிலர்கள் சிவராஜ், ஜனார்த்தனன், தமிழ்நாடு கிராமத் தொழிலாளர் விழிப்புணர்வு இயக்கத்தின் கெளரவத் தலைவர் தா.ராமச்சந்திரன், சமூக ஆர்வலர் ஜெயக்குமார், கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நடைபெற உள்ள தேர்தலில் நூறு சதவீத வாக்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அன்னைக் கரங்கள் பொதுநலச் சங்க அமைப்பாளர் கோபி நன்றி கூறினார். இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று விழிப்புணர்வுப் பதாகையில் கையெழுத்திட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai