Enable Javscript for better performance
பேருந்துப் பயணிகளிடம் நகைத் திருட்டு: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவை நகரப் பேருந்துகளில் பயணிகளிடம் நகைகள் திருடியதாக 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

     கோவை மாநகர நகரப் பேருந்துகளில் பயணிகளிடம் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதுகுறித்து மாநகர  காவல் துறைக்கு புகார்கள் வந்தன.

     அதையடுத்து, பயணிகளிடம் நகைகளைத் திருடும் மர்ம நபர்களைப் பிடிக்க,  மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை ஆணையர் நிஷா பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

      இத்திருடர்களைப் பிடிக்க தனிப் படையினர் மாறுவேடத்தில் நகரப் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், டவுன்ஹால் வந்த பேருந்தில் பீளமேடு புதூரைச் சேர்ந்த ஞானம்பிக்கை என்பவரின் பையில் இருந்து 4 பவுன் நகையை  திருடியதாக இரண்டு பேரை தனிப்படை போலீஸார் பிடித்தனர்.

     விசாரணையில், நகையைத் திருடியது விளாங்குறிச்சி கொங்குநகரைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் குமார் (36), சேரன் மாநகரைச் சேர்ந்த ராமு (37) என தெரியவந்தது. இதே நபர்கள் மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்தில் பயணம் செய்த நரசிம்மநாய்க்கன்பாளையம் ராஜேந்திர நகரைச் சேர்ந்த நஞ்சுண்டனின் மனைவி பிரேமாவிடம் இருந்து 3 பவுன் நகையை திருடிச் சென்றதாகவும் தெரியவந்தது.

     போலீஸார், அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai