Enable Javscript for better performance
மக்கள் நலக் கூட்டணிக்கு  கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் நலக் கூட்டணிக்கு  கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம் ஆதரவு

    By கோவை  |   Published on : 15th April 2016 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை ஜில்லா மில் தொழிலாளர்கள் சங்கம் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

     கோவை ஜில்லா மில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட கவுன்சில் கூட்டம் தியாகிகள் நிலையத்தில் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் என்.கிருஷ்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

     இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

     சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலன் கருதி தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி மற்றும் த.மா.க. கூட்டணி உருவாகியுள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கித் தேர்தலைச் சந்திக்கின்றனர். இக்கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது, இக்கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

      கோவை, ஸ்ரீ ரங்கவிலாஸ் பஞ்சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் குற்ற வழக்குத் தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சாலை கழகத்திற்குச் சொந்தமான அனைத்து பஞ்சாலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     தொழிலாளர்கள் பணிபுரியும் காலத்தில் வருங்கால வைப்பு நிதிக்காக அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகைக்கு இணையாக தொழிற்சாலை நிர்வாகம் பணம் செலுத்தும் பணத்திற்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.

    மேலும், 58 வயது பூர்த்தியடைவதற்கு முன்பாக வேலையில் இருந்து தொழிலாளர் வெளியேறினால் அவரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவு கண்டிக்கத்தக்கது ஆகும்.

     மத்திய அரசின் தபால் நிலையங்கள் மற்றும் காப்பீட்டுத் துறையில் பொதுமக்களின் சேமிப்புத் தொகைக்கான வட்டியை குறைப்பதை மத்திய அரசு வைவிட வேண்டும். அவ்வாறு குறைத்தால் பொதுத் துறை நிறுவனங்கள் நலிவடையும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     இக்கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் எம்.எல்.ஏ., செயலாளர்கள் கே.ஜி.ஜெகநாதன், சி.சிவசாமி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai