Enable Javscript for better performance
\\\"மக்கள் நலத் திட்டங்களால் அதிமுக வெற்றி பெறும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மக்கள் நலத் திட்டங்களால் அதிமுக வெற்றி பெறும்'

    By பொள்ளாச்சி  |   Published on : 15th April 2016 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது உறுதி என பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசினார்.

    பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இத்தொகுதி அதிமுக வேட்பாளரும், சட்டப் பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசியது:  தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தன் கட்சியையும், சின்னத்தையும், மக்களையும் மட்டுமே நம்பி தேர்தலில் வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா நிறுத்தியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களால் மீண்டும்  அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது உறுதி. விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், பசுமை வீடுகள் என ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது என்றார்.

    நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார், நகர்மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் குருசாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர் தம்பு, கூட்டுறவு வங்கித் தலைவர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai