Enable Javscript for better performance
யாருக்கு ஒட்டு?- Dinamani

சுடச்சுட

    

    கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், கிராம மக்களின் வாழ்க்கைத் தரம்  மேம்பட வழிவகுக்கும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் கட்சிக்கே எனது வாக்கு.

    எஸ். ராஜரத்தினம்,

    விவசாயி, மேட்டுப்பாளையம்.

     

     

    கட்சி ஆரம்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் காலம் முதல் இன்று வரை மக்களுக்குச் சிறந்த சேவையாற்றி வரும் திமுகவுக்கே எனது வாக்கு.

    கே.ருக்மணி அம்மாள்,

    சமுதாய அறக்கட்டளை நிர்வாகி,

    காரமடை.

     

     

    தமிழக அரசியலில் ஜனநாயகத்தை விட, பணநாயகமே முக்கிய இடம் பெற்று வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது. இதைத் தவிர்த்து, மக்கள் நலனையும், நாட்டு முன்னேற்றத்தையும் முன்வைத்து நல்லாட்சிக்கு உறுதி கூறும் பாஜகவுக்கே  எனது ஓட்டு.

    என்.மோகன்,

    ரியல் எஸ்டேட் ஆலோசகர்,

    மேட்டுப்பாளையம்.

     

     அடித்தட்டு மக்கள், முதியோர், மாணவ,மாணவியர், பெண்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நலத் திட்ட உதவிகளை வழங்கி, படிப்படியாக மது விலக்கை  அமல்படுத்துவோம் என அறிவித்துள்ள ஜெயலலிதாவுக்கே எனது வாக்கு.

    மல்லிகா முருகேசன்,

    மகளிர் குழுத் தலைவி, மேட்டுப்பாளையம்.

     

     

    அரசியல், மக்கள் சேவை என்பதற்கு பதிலாக வியாபார முதலீடாக மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் லாப நோக்கமின்றி, மக்களுக்கு உண்மையாகவே சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் யார் வருகிறார்களோ அவர்களுக்கே எனது வாக்கு

    சாந்தி முத்துசாமி,இல்லத்தரசி,

    மேட்டுப்பாளையம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai