விளையாட்டுப் போட்டி: ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கோவை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

கோவை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

குளோபல் கல்வி நிலையம் மற்றும் விளையாட்டுக் குழுமம் இணைந்து நடத்திய ஜி.இ.எஸ்.எ. குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

முதல் வகுப்புக்கான 50 மீட்டர் ஓட்டப் போட்டி, பந்து எறியும் போட்டி, தடைதாண்டும் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி கிரேஸ் ஏஞ்சல் முதல் இடத்தையும், இரண்டாம் வகுப்புக்கான தடை தாண்டும் போட்டி, பந்து எறியும் போட்டிகளில் மாணவி ஆதிகா முதலிடத்தையும், நான்காம் வகுப்புக்கான பந்து எறியும் போட்டியில் மாணவி பிரியங்கா, தடை தாண்டும் போட்டியில் மாணவர் ஜேரட், ஐந்தாம் வகுப்புக்கான பந்து எறிதலில் மாணவர் அஸாஸ் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். தனிநபருக்கான பரிசுக் கோப்பையை கிரேஸ் ஏஞ்சல் பெற்றுள்ளார். அணிவகுப்புப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், ஒட்டுமொத்த பள்ளிகளுக்கிடையில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com