Enable Javscript for better performance
கோவை-பெங்களூர் இடையே விரைவில் இரவு நேர ரயில் அறிமுகம்: வானதி சீனிவாசன் - Dinamani

சுடச்சுட

    

    கோவை-பெங்களூர் இடையே விரைவில் இரவு நேர ரயில் அறிமுகம்: வானதி சீனிவாசன்

    By dn  |   Published on : 15th May 2016 12:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vanathi srinivasan

    கோவை-பெங்களூர் இடையே விரைவில் இரவு நேர ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாய்பாபா, சிவானந்தா காலனி பகுதிகளில் வானதி சீனிவாசன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கோவை-பெங்களூர் இடையே இரவு நேர ரயில் விட வேண்டும் கோவை நகர மக்கள் 30 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து, அண்மையில் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் இத்தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வழங்கினேன்.

    அப்போது, நீண்ட காலக் கோரிக்கையான கோவை-பெங்களூர் இடையே இரவு நேர ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். இதுதொடர்பாக, பிரதமர் மோடி ரயில்வே வாரியத்திடம் பரிந்துரை செய்துள்ளார்.

    கோவை-பெங்களூர் இடையே இரவு நேர ரயிலை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழித் தடத்தில் விரைவில் ரயில் இயக்கப்படவுள்ளது. மேலும், இத்தொகுதிக்கு உள்பட்ட தகுதியான அனைத்து மக்களும் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இணைக்கப்படுவார்கள் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai