Enable Javscript for better performance
ரியல் எஸ்டேட் மோசடி: புகார் அளிக்க அவகாசம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் ஸ்ரீ கந்தகுரு நகர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 15 நாள்களுக்குள் புகார் அளிக்கலாம் என மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்டப் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    கோவை மாவட்டம், துடியலூர் வரப்பாளையம் பகுதியில் ஸ்ரீ கந்தகுரு நகர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனம் தவணை முறையில் வீட்டுமனை தருவதாகக் கூறி இதுவரையில் 33 நபர்களிடம் ரூ.90 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது.

    இதுகுறித்து கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் கடந்த 2013-இல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டப் பகுதிகளில் இருந்து இந்நிறுவனத்தில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    எனவே, இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தால் 15 நாள்களுக்குள் கோவை மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai