தண்டுகள் மூலம் கொய்யா நாற்றுகள் உற்பத்தி: விவசாயிகள் மகிழ்ச்சி

புதிய தொழில்நுட்பம் மூலம் செடிகளின் தண்டுகள் மூலமாக கொய்யா நாற்றுகளை மேட்டுப்பாளையம் ஈடன் நாற்றுப் பண்ணை
தண்டுகள் மூலம் கொய்யா நாற்றுகள் உற்பத்தி: விவசாயிகள் மகிழ்ச்சி

புதிய தொழில்நுட்பம் மூலம் செடிகளின் தண்டுகள் மூலமாக கொய்யா நாற்றுகளை மேட்டுப்பாளையம் ஈடன் நாற்றுப் பண்ணை உற்பத்தி செய்துள்ளது. இதற்கு, கொய்யாப்பழம் சாகுபடி செய்யும் விவசாயிகள்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 பழ வகைகளில் மருத்துவ குணங்கள், ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சத்துகளை அதிகம் கொண்டுள்ளது கொய்யாப்பழம். கொய்யாப்பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் விவசாயிகள் அதிகமாக இதை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதற்காக, மண்பதியம் முறையிலேயே நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுவதால் அதிக எண்ணிக்கையிலும், தரமான நாற்றுகள் கிடைப்பதிலும் சிரமம் இருந்து வருகிறது.
 இந்தக் குறையை போக்க மேட்டுப்பாளையத்தில் 1998-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஈடன் நாற்றுப் பண்ணை, கொய்யா நாற்று உற்பத்தி முறையில் புதிய முறையை கையாண்டு, விவசாயிகளுக்கு வணிக ரீதியாக அதிக பலன்தரும் கொய்யா நாற்றுகளை, அச்செடியின் தண்டுகளைக் கொண்டே  உற்பத்தி செய்துள்ளது.
 இந்த நாற்றுப் பண்ணை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வணிக மேம்பா ட்டு துறையில் உறுப்பினராகவும் பதிவு பெற்றுள்ளது. இலைகள்  மூலம் நாற்று உற்பத்தி எனும் புதிய முறையையும் இந்த பண்ணையில் அறிமுகப்படுத்தியதோடு, விவசாயிகள் விரும்பும் பழ மரங்களின் நாற்றுகளை, விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்தே உற்பத்தி செய்தும் வழங்கப்பட்டு வருகிறது.
 கொய்யாவில் புதிய நாற்று உற்பத்தி முறை குறித்து நாற்று உற்பத்தியில் 20 ஆண்டு அனுபவம் கொண்டவரும், வேளாண் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் பண்ணை தொழில்நுட்ப முதுநிலை பட்டப் படிப்பு மாணவருமான, ஈடன் நாற்றுப்பண்ணை நிறுவனர் எஸ்.ராஜரத்தினம் கூறியது:
 நடைமுறையில் கொய்யா நாற்றுகள், விதைகள், மண் பதியம், ஒட்டு மற்றும் மொட்டு கட்டுதல் முறைகளின் மூலமும் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முறைகளுக்கு மாற்றாக, கொய்யாத் தண்டுகளை கொண்டு நாற்றுகளை உற்பத்தி செய்யும் புதிய முறையை எங்கள் பண்ணையில் உருவாக்கியுள்ளோம்.
  இந்த புதிய முறையில் பெறப்படும் கொய்யா நாற்றுகள், தாய் மரங்களை போன்றே மகசூல் தரவல்லது. பழங்களின் தரம், மணம், சுவை, வண்ணம் போன்றவை தாய்மரத்திற்கு ஒப்பாக  இருக்கும். இதன் மூலம் ஒரு மரத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் நாற்று உற்பத்தி செய்வது சாத்தியம்
வேர் வராத அரியவகை மூலிகை செடிகளையும், அரிய வகை தாவரங்களையும், அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களையும் இம்முறை மூலம் உற்பத்தி செய்வது எளிதில் சாத்தியமாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com