Enable Javscript for better performance
பஞ்சு வியாபாரியிடம் 150 பவுன் கொள்ளை: மேலும் 4 பேர் சிக்கினர்- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சு வியாபாரியிடம் 150 பவுன் கொள்ளை: மேலும் 4 பேர் சிக்கினர்

    By DIN  |   Published on : 22nd November 2016 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    கோவையில் கடந்த மாதம் பஞ்சு வியாபாரியிடம் 150 பவுன் நகை, ரூ. 40 லட்சம் பணம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் 4 பேர் போலீஸாரிடம் சிக்கினர்.
    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸார் கூறியதாவது:
     கோவை, சிங்காநல்லூரை அடுத்த ராமாநுஜம் நகரில் வசித்து வருபவர் எஸ்.பஷீர் (53). இவர் நூற்பாலைகளில் இருந்து பஞ்சுகளை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
     இந்நிலையில், வருமான வரித் துறை அதிகாரிகள் என்று கூறி இவரது வீட்டுக்கு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வந்த 12 பேர், வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் லாக்கரை சோதனைக்காக அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூறி பஷீரையும் காரில் ஏற்றிச் சென்றனர். பின்னர் அவரை நீலாம்பூர் புறவழிச்சாலையில் இறக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    இதில், பஷீரிடம் வேலை பார்த்து வந்த பரமலேஸ்வரன், அவரது நண்பர்களான சலீம், லோகநாதன், ரிஸ்வான் (38), ராமநாதபுரத்தை சேர்ந்த ஜாபர்ஷெரீப் (32), மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த கண்ணன் (35) ஆகியோரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    kattana sevai