Enable Javscript for better performance
அத்திக்கடவு குடிநீர் பிரதானக் குழாய் சீரமைக்கும் பணி தீவிரம்: இன்று முதல் குடிநீர் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    அத்திக்கடவு குடிநீர் பிரதானக் குழாய் சீரமைக்கும் பணி தீவிரம்: இன்று முதல் குடிநீர் விநியோகம்

    By DIN  |   Published on : 28th November 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சி 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட அம்மன் கோயில் அருகே உடைந்த அத்திக்கடவு குடிநீர்த் திட்ட பிரதானக் குழாயைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    இப்பணிகள் முடிவுற்று திங்கள்கிழமை (நவம்பர் 28) முதல் குடிநீர் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கோவை மாநகராட்சி 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட கே.வி.கே. நகர் உள்ளது. இந்தப் பகுதியில் 80 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதி வழியாகச் செல்லும் அத்திக்கடவு குடிநீர்த் திட்டத்தின் பிரதானக் குழாய் சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் உடைந்தது. இதனால், அக்குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் கே.வி.கே.நகர் குடியிருப்புக்குள் புகுந்ததால் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
    இதையடுத்து, உடைந்த குழாயைச் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
    உடைந்துள்ள குழாயைச் சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணி ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் முடிவடையும். மேலும், திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
    இந்தக் குழாய் உடைப்பால் குடிநீர் விநியோகத்தில் எந்த விதமான தடையும் ஏற்படவில்லை என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai