Enable Javscript for better performance
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் வேளாண் விரிவாக்க மையம் கட்ட பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் வேளாண் விரிவாக்க மையம் கட்ட பூமி பூஜை

    By DIN  |   Published on : 28th November 2016 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இந்நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
    மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வி.சி.ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமானப் பணியைத் துவக்கி வைத்தனர்.
    இதில், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் அருண் குணாளன், கீரணத்தம் பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai