Enable Javscript for better performance
யானைகள் தாக்கி உயிரிழந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் நிவாரணம்- Dinamani

சுடச்சுட

    

    யானைகள் தாக்கி உயிரிழந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் நிவாரணம்

    By DIN  |   Published on : 28th November 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் யானைகள் தாக்கி உயிரிழந்த மற்றும் பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ. 7 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
     சிறுமுகை வனச் சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வனச் சரக அலுவலர் மனோகரன் தலைமை வகித்தார். கைத்தறிக் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன துணைத் தலைவர் ரவிகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் ரேணுகா ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுமுகை வனவர் ரவி வரவேற்றார்.
     இதில், யானைகள் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் வழங்கினார்.
      யானை தாக்கி உயிரிழந்த சிட்டேபாளையம் பகுதி விவசாயி கனகராஜு குடும்பத்துக்கு ரூ. 2.75 லட்சம், அதே பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி குடும்பத்துக்கு  ரூ. 2.50 லட்சம், யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட இரும்பறை, புதுக்காடு, சம்பரவள்ளி, சிட்டேபாளையம், பெத்திகுட்டை பகுதிகளைச் சேர்ந்த 13 விவசாயிகளுக்கு ரூ. 1.91 லட்சம் என மொத்தம் ரூ 7.16 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பாபு, வனச் சரக அலுவலர்கள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சிறுமுகை வனக் காப்பாளர் லால் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai