Enable Javscript for better performance
இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தீவிரம்

    By DIN  |   Published on : 08th October 2016 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) அதிகாரிகளின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
    இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சி.சசிகுமார் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி ஜி.என்.மில்ஸ் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி 8 தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் பிடிபடவில்லை.
    இதையடுத்து, இந்த வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார், மேட்டுப்பாளையம் சாலையில் அக்டோபர் 22-ஆம் தேதி பதிவான விடியோ பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனர். சந்தேகப்படும்படியாக நடமாடிய 4 நபர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டனர். அதேபோல், கடந்த மாதம் 16-ஆம் தேதி கோவை மத்திய சிறைச்சாலையில் செல்லிடப்பேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இந்த செல்லிடப்பேசிக்கும், சசிகுமாரின் கொலைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகுமாரின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்புகள் உள்பட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிபிசிஐடி காவல் காண்காணிப்பாளர் விஜயகுமாரி வெள்ளிக்கிழமை கோவை வந்தார். பின்னர் அவர், காவல்துறை அதிகாரிகளுடன் இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான ஆலோசனை வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai