Enable Javscript for better performance
இளைஞர்களிடம் 6-ஆவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கோவை இளைஞர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தினர்.
    கேரள மாநிலம், கண்ணூரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் அக்டோபர் 1-இல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்லிடப்பேசி, மடிக்கணினிகளில் இருந்த தகவல்கள், முகநூல் பதிவுகளைக் கொண்டு கோவையைச் சேர்ந்த 11 பேரிடம் கடந்த சில நாள்களாக என்ஐஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இந்நிலையில், ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமையும் என்ஐஏ அதிகாரிகள் இளைஞர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என்று காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai