Enable Javscript for better performance
கைத்தறி சேவை மேம்பாட்டு மைய பயிற்சியாளராக வி.காரப்பன் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    கைத்தறி சேவை மேம்பாட்டு மைய பயிற்சியாளராக வி.காரப்பன் நியமனம்

    By DIN  |   Published on : 08th October 2016 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் கைத்தறி சேவை மேம்பாட்டு மையத்தின் சிறப்புப் பயிற்சியாளராக சிறுமுகையைச் சேர்ந்த நெசவாளர் வி.காரப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    கோவை மாவட்டம், சிறுமுகையை அடுத்த பகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.காரப்பன். படிப்பறிவு இல்லாத இவர், சிறிய வயது முதலே நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். கைத்தறி குறித்த தகவல்களை அனைவரும் அறியும் வகையில் "கைத்தறி களஞ்சியம்' மற்றும் "கைத்தறி நெசவு' ஆகிய இரு நூல்களை எழுதி, வெளியிட்டுள்ளார்.
    கைத்தறி இயந்திரத்தை மேம்படுத்துவதில் கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இவர், கால்களால் இயக்கப்படுவதற்குப் பதிலாக கைகளால் இயக்கப்படும் கைத்தறி இயந்திரத்தை வடிவமைத்தார். இந்த இயந்திரம் மத்திய அரசின் கைத்தறி துறையின் பாராட்டைப் பெற்றுள்ளது.
    தற்போது, மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒரு கை, ஒரு காலால் இயக்கப்படும் கைத்தறி இயந்திரத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் வடிவமைத்த புதிய வகை கைத்தறி இயந்திரங்களை மத்திய கைத்தறி துறையின் உயர் அதிகாரிகள் நேரில் வந்து, ஆய்வு செய்து பாராட்டி உள்ளனர்.
    இந்நிலையில், புது தில்லி கைத்தறி வளர்ச்சித் திட்ட ஆணையரின் பரிந்துரையின் பேரில், சேலம் கைத்தறி நெசவாளர் சேவை மைய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், நெசவாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தலைமைப் பயிற்சியாளராகவும் காரப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை சேலம் மத்திய நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் வாசு நியமனம் செய்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai