Enable Javscript for better performance
சரிதா நாயர் மீதான வழக்கு அக்.21-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சரிதா நாயர் மீதான காற்றாலை மோசடி தொடர்பான வழக்கை விசாரணையை வரும் அக்டோபர் 21-ஆம் தேதிக்கு கோவை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
    கோவை, வடவள்ளியில் உள்ள சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை நிறுவனத்தின் இயக்குநர்களான சரிதா எஸ்.நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் நாயர், ஆர்.சி.ரவி ஆகியோர் காற்றாலை அமைத்துத் தருவதாகக் சுமார் ரூ. 26 லட்சம் மோசடி செய்ததாக 2009-இல் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
    இந்த வழக்கு விசாரணை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (ஜெ.எம்.6) நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மட்டுமே நேரில் ஆஜரானார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai