Enable Javscript for better performance
துப்புரவு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்: ஆணையரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்: ஆணையரிடம் மனு

    By DIN  |   Published on : 08th October 2016 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தூய்மைத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    இது குறித்து சங்கத்தினர் மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனு விவரம்:
    கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நீண்ட நாள்களாக பணியாற்றி வருகின்றனர்.
    பொதுமக்களைப் பாதுகாக்கின்ற அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுவரும் துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தைத் தவிர வேறு எந்தவித சலுகைகளும், பணப் பலன்களும் வழங்கப்படுவதில்லை.
    இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருபவர்கள். பிற அரசுத் துறைகளில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். எனவே, மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
    இது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai