Enable Javscript for better performance
பராமரிப்புப் பணி: நாகர்கோயில் ரயில் தாமதமாக இயக்கப்படும்- Dinamani

சுடச்சுட

    

    பராமரிப்புப் பணி: நாகர்கோயில் ரயில் தாமதமாக இயக்கப்படும்

    By DIN  |   Published on : 08th October 2016 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை-விருதுநகர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நவம்பர் 10-ஆம் தேதி வரை கோவை-நாகர்கோயில் ரயில் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பராமரிப்புப் பணிகள் நவம்பர் 10-ஆம் தேதி வரையிலும் (வியாழக்கிழமைகள் நீங்கலாக) நடைபெற உள்ளது. இதனால், நாகர்கோயில்-கோவை பயணிகள் ரயில் (எண் 56319) திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு 57 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.
    அதேபோல், கோவை ரயில் நிலையம் வரும் வரையிலும் அந்த ரயில் தாமதமாக இயக்கப்படும். மேலும், மறுமார்க்கத்தில் இயக்கப்படும் கோவை-நாகர்கோயில் ரயில் (எண் 56320) 44 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.09 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடைவதுடன், நாகர்கோயில் ரயில் நிலையம் சென்றடையும் வரையிலும் தாமதமாகவே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai