Enable Javscript for better performance
பெண் பாலின விகிதாசார சரிவைத் தடுப்பது குறித்து கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெண் பாலின விகிதாசார சரிவைத் தடுப்பது குறித்து கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 08th October 2016 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில், பெண் சிசுக் கொலை மற்றும் பெண் பாலின விகிதாசார சரிவைத் தடுப்பது குறித்து சட்ட நிபுணர்களுக்கான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கோவை லைப் ஃபார் ஆல் மற்றும் அலையென்ஸ் டிபென்டிங் ப்ரீடெம் இந்திய அமைப்பு சார்பில் சட்ட நிபுணர்களுக்கான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்தியா முழுவதும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் என்பது ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை விகித்தைவிட பெருமளவில் குறைந்துள்ளது. பெண் பாலின விகித சரிவை மீட்டெக்க, கருவில் இருக்கு குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் தடுப்புச் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க, சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுத்துப் பாதுகாப்பு வழங்குவது, பெண் கடத்தல் மற்றும் கொலைகள் ஆகியவற்றைத் தடுப்பது குறித்து தகுந்த சட்டங்களை இயற்றுவது தொடர்பாக இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
    இந்தியா முழுவதும் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். இந்தச் சூழலை மாற்றியமைப்பது குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
    இக்கருத்தரங்கில் லைப் ஃபார் ஆல் அமைப்பின் தலைவர் சைமன் துரைராஜ், டாக்டர் சுஜாதா சாமுவேல், வழக்குரைஞர் அனுஸ்ரீ பெர்ணார்டு, சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai