Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்ததாகக் கூறி, அதைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் 50 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    கோவை, காந்திபுரம் விரைவுப் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்ட பிறகும் மௌனம் காத்த மத்திய அரசு, இதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
    மேலும், அனைத்து கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு குடியரசுத் தலைவர், பிரதமரை நேரில் சந்தித்து இதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
    காவிரி தண்ணீர் என்பது டெல்டா மாவட்டப் பாசனத்துக்குப் பயன்படுவது மட்டுமில்லாமல், 18 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
    அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்து மதிமுக தொடர் போராட்டம் நடத்தும் என்றார்.
    ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தேர்தல் பணிக் குழு உறுப்பினர் சேதுபதி, தீர்மானக் குழு செயலாளர் கிருஷ்ணசாமி, பகுதிச் செயலாளர்கள் வெள்ளிங்கிரி, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai