Enable Javscript for better performance
மயங்கி விழுந்த பெண்ணின் நகைகள் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் நடந்து சென்றபோது கீழேவிழுந்து மயக்கமடைந்த பெண்ணின் கைப்பையில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகின.
    கோவையை அடுத்த மதுக்கரையைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி சித்ரா (42). இவர், போடிபாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் போடிபாளையம் சாலையில் நடந்துசென்றபோது, கீழேவிழுந்து மயக்கமடைந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு, சங்கருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சங்கர் அங்கு சென்றுபார்த்தபோது, சித்ராவின் கைபையில் இருந்த 10 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai