Enable Javscript for better performance
ரூ. 5 லட்சம் மதிப்பிலான குறுந்தகடுகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய திரைப்படங்களின் குறுந்தகடுகளை (சி.டி) திருட்டு விடியோ தடுப்பு காவல் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.
    இதுகுறித்து கோவை திருட்டு விடியோ தடுப்பு காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்தி:
    திருட்டு விடியோ தடுப்புக் காவல் துணை கூடுதல் இயக்குநர் உத்தரவின் பேரில் சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், பொள்ளாச்சி கிருஷ்ணா கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் புதிய திரைப்படங்களின்
    குறுந்தகடுகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், அண்மையில் வெளிவந்த திரைப்படங்களின் சுமார் 2,500 குறுந்தகடுகள் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படாத 750 குறுந்தகடுகளையும் பறிமுதல் செய்தனர்.
    மேலும், வெள்ளிக்கிழமை திரைக்குவந்த புதிய படங்களில் 16 ஆயிரம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். குறுந்தகடுகள் பதிவிறக்கம் செய்ய பயன்டுத்தப்பட்ட 10 கருவிகளையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இதனிடையே, ஈரோடு மாவட்டம் பவானியில் சில மளிகைக் கடைகளில் போலி டீ தூள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் சுமார் 260 கிலோ டீ-தூள்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai