Enable Javscript for better performance
ஸ்ரீஜலக்கண் மாரியம்மன் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கோட்டைப்பாளையத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீஜலக்கண் மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    கொண்டையம்பாளையம் ஊராட்சி, கோட்டைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீஜலக்கண் மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும்.
    இந்த ஆண்டு கோயில் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கியது. 29-ஆம் தேதி கணபதி ஹோமம், ஆலயப் புண்ணியார்ச்சனையுடன் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 30-ஆம் தேதி முதல் காலை, மாலை நேரங்களில் பக்தர்கள் பூவோடு எடுத்து திருக்கோயிலை வலம்வந்து கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    அக்டோபர் 5-ஆம் தேதி சக்தி அழைத்தல், கரகம் அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6-ஆம் தேதி காலை 6 மணி அளவில் அம்மன் திருக்கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், அக்கினிக் கரகம் எடுத்தல், தேர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 7-ஆம் தேதி சாமியாடிகளின் பட்டினி விரதம் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    வரும் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொலி எருதுகளின் வேடிக்கை நிகழ்ச்சி, எருது வாழ்த்துதல் அபிஷேக ஆராதனை உள்ளிட்டவை நடைபெற உள்ளது. 14-ஆம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இத்திருவிழாவில் கோட்டைப்பாளையம், ஏ.எஸ்.குளம், தொட்டிபாளையம், சுற்றுவட்டார 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai