Enable Javscript for better performance
1000 இளம் தொழில்முனைவோர்களை உருவாக்கத் திட்டம்: ஒன்லி ஸ்டேபிள்ஸ் நிர்வாகம் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    1000 இளம் தொழில்முனைவோர்களை உருவாக்கத் திட்டம்: ஒன்லி ஸ்டேபிள்ஸ் நிர்வாகம் தகவல்

    By DIN  |   Published on : 08th October 2016 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் அடுத்த 6 மாதங்களில் ஆயிரம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக கோவையைச் சேர்ந்த ஆன்லைன் மூலம் மளிகைப் பொருள்களை விற்கும் நிறுவனமான ஒன்லி ஸ்டேபிள்ஸ் தெரிவித்துள்ளது.
    கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், தொழில்முனைவோரின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.
    இதில், ஜி.ஆர்.டி. கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.ஏ. படிக்கும் மாணவி ரேமா கேத்ரீனின் ராசி இட்லி, தோசை மாவு, பி.டெக் மாணவி ஏஞ்சல், சாந்தி ஆகியோரின் தேங்காய் எண்ணெய், பேச்சுப் பயிற்சியாளர் வித்யாவின் தொக்கு, சாமுவேல் சுதாகரின் ஷாம்பு போன்ற தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
    இதுகுறித்து ஒன்லி ஸ்டேபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான ராஜேஷ் கீர்த்தி,
    அந்தோணி, ஸ்ரீராம் பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
    ஆன்லைன் மூலமாக மளிகை விற்பனையை கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக செய்து வரும் நாங்கள், இப்போது இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கேட்ச்டுரோணா என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
    அதன்படி, திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லாத இளம் தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க, உரிமம் பெற, வர்த்தகத் தொடர்பு, நிதி வசதி ஆகியவற்றை வழங்கவும் நாங்கள் முன்வந்துள்ளோம். மேலும், அவர்களது தயாரிப்புகளை எங்களது இணையதளம் மூலமாகவும், ஆன்லைன் மளிகை வர்த்தகத்திலும் இணைத்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அடுத்த 6 மாதங்களில் புதிதாக ஆயிரம் தொழில் முனைவோர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
    தொழில் முனைவோரின் தயாரிப்புகளை உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதன் தரத்தை பரிசோதித்த பிறகே மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க உள்ளோம். இதன் மூலம் உள்ளூர் தயாரிப்புகளை உலகின் 140 நாடுகளுக்குக் கொண்டுசென்று அன்னியச் செலாவணியை ஈட்ட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai