Enable Javscript for better performance
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் கோவை கோட்டம் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் கோவை கோட்டம் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 15th October 2016 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் கோவை கோட்டம் அதிகமான பிரீமியம் தொகையை பெற்று சிறப்பிடம் பெற்றிருப்பதாக கோட்ட அஞ்சலக முதுநிலைக் கண்காணிப்பாளர் பி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
     தேசிய அஞ்சல் வார விழாவின் ஒரு பகுதியாக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு விழா கோவை மகளிர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மண்டல உதவி இயக்குநர் எஸ்.கோபிநாதன் முன்னிலை வகித்தார்.
     விழாவுக்குத் தலைமை வகித்து கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் பேசியதாவது:
     கோவை கோட்டம், 2015-16-ஆம் ஆண்டில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.8.49 கோடியை பிரீமியமாக ஈட்டியுள்ளது. அதேபோல, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 11.19 கோடி பிரீமியம் பெறப்பட்டுள்ளது.
     நடப்பு நிதியாண்டில் இதுவரை கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ. 6.29 கோடி பிரீமியம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் மட்டும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 57.30 லட்சமும், கிராமிய அஞ்சலகக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 1.01 கோடியும் பிரீமியமாக பெற்று கோவை கோட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது என்றார்.
     முன்னதாக, அதிக பிரீமியம் தொகையைப் பெற்ற அலுவலர்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கோவை வடக்கு உபகோட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜி.சுந்தர்ராஜ், மண்டல ஆயுள் காப்பீட்டுத் துணைக் கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு, மத்திய உபகோட்ட துணைக் கண்காணிப்பாளர் கே.ராஜேந்திரன், உதவிக் கண்காணிப்பாளர்கள் எஸ்.ஜஹாங்கீர், ஜவஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai