Enable Javscript for better performance
அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களால் பொதுமக்கள் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களால் பொதுமக்கள் பாதிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை கனரக வாகனங்களில் பயன்படுத்துவதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் கனரக மற்றும் சொகுசு வாகனங்கள், தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கனரக வாகன ஓட்டிகள், இருசக்கர வாகன ஓட்டிகளின் அருகில் சென்று திடீரென ஒலி எழுப்புவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல, சிக்னல்களில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு முன்பாக நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை, கனரக வாகன ஓட்டிகள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சிக்னலை மீறிச் செல்லுமாறு வலியுறுத்தி ஒலி எழுப்புவதும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.
    இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    இதைத் தவிர்க்க காவல் துறையினரும், மோட்டார் வாகன ஆய்வாளரும் அவ்வப்போது வாகனத் தணிக்கை மேற்கொண்டு விதியை மீறி காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai