Enable Javscript for better performance
அர்ஜுன் சம்பத் வீட்டில் ஆயுத பூஜைக்கு துப்பாக்கி வழங்கிய காவலர் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    அர்ஜுன் சம்பத் வீட்டில் ஆயுத பூஜைக்கு துப்பாக்கி வழங்கிய காவலர் இடமாற்றம்

    By DIN  |   Published on : 15th October 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆயுத பூஜை கொண்டாடியபோது அதற்காக துப்பாக்கி வழங்கிய காவலர் ஆயுதப்படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
     கோவையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அண்மையில் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஆயுத பூஜை கொண்டாடியதாக முகநூலில் படம் வெளியானது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவை, சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     இந்நிலையில், பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அவருடைய பாதுகாப்புக்குச் சென்ற காவலர் முத்து என்பவருடையது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக காவலர் முத்து மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
     அதன்படி, பாதுகாப்புப் பணியில் இருந்து அவரை விடுவித்து மீண்டும் ஆயுதப்படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
     மேலும், துப்பாக்கி வழங்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai