Enable Javscript for better performance
என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொச்சி சென்ற கோவை இளைஞர்கள் விடுவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொச்சி சென்ற கோவை இளைஞர்கள் விடுவிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் கேரள மாநிலம், கொச்சிக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த கோவை இளைஞர்கள் மூவரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
     கேரள மாநிலத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளால் கடந்த 2 வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கோவை உக்கடம், ஆத்துப்பாலம், கோட்டைமேடு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் 14 பேரிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ஆம் தேதி முதல் 10 நாள்கள் விசாரணை நடத்தினர்.
     இதையடுத்து, அவர்களில் 3 பேர் விசாரணைக்காக கேரள மாநிலம், கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ-வின் கிளை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் கடந்த 3 நாள்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவர்கள் மூவரையும் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் விடுவித்தனர். அவர்கள் மூவரும் துருக்கி, சிரியாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்திருந்ததால் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  அவர்களிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தக் கூடும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai