Enable Javscript for better performance
கணியூர் சுங்கச் சாவடியில் சட்டவிரோதமாக வாகனக் கட்டணம் வசூல்: விவசாயிகள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    கணியூர் சுங்கச் சாவடியில் சட்டவிரோதமாக வாகனக் கட்டணம் வசூல்: விவசாயிகள் புகார்

    By DIN  |   Published on : 15th October 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கணியூர் சுங்கச் சாவடியில் சட்டவிரோதமாக வாகனக் கட்டணம் வசூலிப்பதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
     இதுகுறித்து, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாபு தலைமையில் ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளித்த புகார் மனு விவரம்:
     தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி-நீலாம்பூர் ஆறு வழிப்பாதையாகவும், மதுக்கரை-வாளையாறு சாலை நான்கு வழிப்பாதையாகவும் அமைக்க கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ. 852 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டன.
     ஆனால், 2013-ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய பணியை முடிக்காததால் சாலை மோசமான நிலையில் உள்ளது.
     இதனால் ஏராளமான விபத்துகள் நடைபெற்று பலர் உயிரிழந்துள்ளனர். சாலைப் பணிகள் தாமதமாக நடைபெற்றுவருவதைக் கண்டித்துப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
     மேலும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பணி முடிக்காத காலத்துக்கு இழப்பீடாக, பணியை மேற்கொண்ட நிறுவனம் நாளொன்றுக்கு ரூ. 4 லட்சத்து 26 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.
     ஆனால், தற்போது வரையில் அந்தத் தொகை வழங்கப்படவில்லை. ஆனால், இந்த சாலைத் திட்டத்துக்காக சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
     எனவே, சட்டவிரோதமாக சுங்க வரி வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் நெடுஞ்சாலைகளில் விவசாயிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai