Enable Javscript for better performance
காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ரத்த தானம்- Dinamani

சுடச்சுட

    

    காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ரத்த தானம்

    By DIN  |   Published on : 15th October 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
    மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் எஸ்விஜிவி பள்ளி இணைந்து நடத்திய ரத்த தான முகாமிற்கு பள்ளித் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். முதல்வர் சசிகலா வரவேற்றார்.
    இம்முகாமில் அரசு மருத்துவமனை ரத்த வங்கிப் பிரிவு மருத்துவர் லட்சுமணகுமார் தலைமையில், ஆய்வக நிபுணர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரைக் கொண்ட மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
    இதில், பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்று 120 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர். முன்னதாக பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகளிடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்த தானத்தின் அவசியம் மற்றும் பயன் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இம்முகாமில் பள்ளி நிர்வாக அலுவலர் சதீஷகுமார், ரத்த வங்கி செவிலியர்கள் கஸ்தூரி, புவனேஸ்வரி, உதவியாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai