Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. போராட்டம்: 54 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. போராட்டம்: 54 பேர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 54 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
     மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அக்கட்சியின் கோவை மாவட்டத் தொழிற்சங்கத் தலைவர் ஏ.சுல்தான் தலைமை வகித்தார்.
     மத்திய மாவட்டத் தலைவர் ஏ.ஏ.அப்துல் காதர், மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது, பொதுச் செயலர்கள் எம்.இப்ராஹிம் பாதுஷா, அப்பாஸ், அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     போராட்டம் குறித்து கட்சியின் மாவட்டச் செயலர் ரஷீப் மிஷரத் கூறியதாவது:
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மத்தியில் ஆளும் பாஜக அரசு, கர்நாடகத்துக்குச் சாதகமாக செயல்படும் விதமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது.
     தமிழர் நலனுக்கு எதிரான மத்திய அரசின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை
    நீக்க முயற்சிக்காமல் இருக்கும் மத்திய அரசு, தொடர்ந்து காவிரி விவகாரத்திலும் தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது என்றார்.
     இதைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 54 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.  மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai