Enable Javscript for better performance
கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்: அமிர்தா பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை- Dinamani

சுடச்சுட

    

    கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்: அமிர்தா பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை

    By DIN  |   Published on : 15th October 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுவதும் கிராமங்களை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சிப் பட்டறை கோவை, அமிர்தா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     இந்திய கிராமங்களில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்கவும், கிராமங்களை மேம்படுத்தவும் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறையை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மின்னியல், கணினி பொறியியல் துறை இணைப் பேராசிரியர் பிரகலாத் தொடக்கி வைத்தார்.
     இதில், அமிர்தா பல்கலைக்கழக துணை வேந்தர் வெங்கட் ரங்கன் பேசியதாவது: இந்திய கிராமங்களின் விடியலுக்காக 2013-ஆம் ஆண்டில் மாதா அமிர்தானந்தமயி தேவியால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
     இதில், அமிர்தா பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 2 வாரம் முதல் 6 மாதம் வரை இந்திய கிராமங்களில் தங்கி, அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து, தேவையானத் தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
     இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக கிராமங்களில் நிலவும் பல அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்றார்.
     இந்நிகழ்ச்சியில், டி.சி.எஸ். இன்னோவேஷன் தலைவர் பி.பாலமுரளீதர், கேரள வேளாண் பல்கலைக்கழக இயக்குநர் ஏ.கே.ஷெரீப், வீ.கே.பரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai