Enable Javscript for better performance
கோவை ரயில் நிலையத்தில் முறைகேடாக வாகனக் கட்டணம் வசூல்: காங்கிரஸ் கட்சியினர் புகார்- Dinamani

சுடச்சுட

    

    கோவை ரயில் நிலையத்தில் முறைகேடாக வாகனக் கட்டணம் வசூல்: காங்கிரஸ் கட்சியினர் புகார்

    By DIN  |   Published on : 15th October 2016 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை ரயில் நிலையத்தில் பொதுமக்களிடம் ஒப்பந்ததாரர் முறைகேடாக வாகனக் கட்டணம் வசூல் செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
     இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வீனஸ் மணி தலைமையில் மாநில பொதுக் குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணி, மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், சமூக ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் ரயில் நிலையத் துணை மேலாளர் தங்கவேலிடம் அளித்த மனு விவரம்:
     கோவை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், வாடகை வாகனங்களில் வந்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் உடனே, ஏறிச் சென்றாலும் ஒப்பந்ததாரர் வாகனக் கட்டணமாக ரூ. 20 வசூல் செய்கின்றார். கட்டணம் செலுத்தாதவர்கள் மிரட்டப்படுகின்றனர்.
     மேலும், இதுபோன்ற அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்கவோ, கட்டணம் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளவோ ரயில் நிலைய வளாகத்தில் எவ்வித வழிகாட்டுதலும் இல்லை.
     இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தக் கட்டண குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவை தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, ரயில் நிலையத்தில் மீண்டும் வாகன நிறுத்தக் கட்டணம் குறித்து பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்புப் பலகை வைக்கவேண்டும்.
     மேலும், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள தபால் துறையின் விரைவு தபால் நிலையத்துக்கு வருபவோரிடமும் வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
     எனவே, முறைகேடாகக் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai