Enable Javscript for better performance
சாலை விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சின்னமத்தம்பாளையத்தில் நேரிட்ட சாலை விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.
    காரமடை, சண்முகாபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மகன் கார்த்திக் (26). இவர், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், சின்னமத்தம்பாளையத்தில் உள்ள அண்ணா நகர் பேருந்து நிறுத்தத்தில் தனது இருசக்கர வாகனம் அருகே வியாழக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியது.
    இதில், பலத்த காயமடைந்த கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai