Enable Javscript for better performance
பருவ மழை தீவிரம்: வால்பாறை தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பருவ மழை தீவிரம்: வால்பாறை தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 15th October 2016 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் வால்பாறை பகுதி தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வால்பாறை வட்டாரத்தில் இவ்வருடம் போதுமான அளவு தென்மேற்குப் பருவ மழை பெய்யவில்லை. அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றத்தாலும் தேயிலைத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.
    இதனால், தேயிலை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாள்களாக வால்பாறை வட்டாரத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதனால், தோட்டங்களில் தேயிலைகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன.  இதன் காரணமாக, விவசாயிகளும், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai