Enable Javscript for better performance
பலாப்பழ மரக்கன்றுகள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    கெம்பநாயக்கன்பாளையத்தில் பலாப்பழ மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
    அன்னூர் நவநிர்மாண் சேனா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்சிக்கு அறக்கட்டளைத் தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சரவணகுமார், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், மேட்டுப்பாளையம் அருகே, கல்லாறு பகுதியில் உள்ள அரசு நாற்றுப் பண்ணையில் இருந்து கொண்டுவரப்பட்ட 500 பலாப்பழ மரக்கன்றுகளை கெம்பநாயக்கன்பாளையம், குப்பேபாளையம், கதவுகரை, எல்லப்பாளையம், சாலையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai