Enable Javscript for better performance
பள்ளி மாணவிகள் உருவாக்கிய டெங்கு விழிப்புணர்வுப் பாடல்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவிகள் உருவாக்கிய டெங்கு விழிப்புணர்வுப் பாடல்

    By DIN  |   Published on : 15th October 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து தனியார் பள்ளி மாணவிகள் எழுதி, இசையமைத்து பாடிய குறுந்தகட்டை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
     கோவை மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மாநகராட்சிப் பகுதிகளில் வாகனம் மூலமாக கொசு ஒழிப்புப் புகையடித்தல், கொசு மருந்து தெளித்தல், மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக வீடுவீடாகச் சென்று குப்பைக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியில், சகோதரிகளான 10-ஆம் வகுப்பு மாணவி அபிநயா, 8-ஆம் வகுப்பு மாணவி கல்யாணி ஆகியோர் இணைந்து டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுப் பாடல் எழுதி, இசையமைத்து, பாடிய குறுந்தகட்டை ஆணையர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டார்.
     மேலும், இந்த விழிப்புணர்வுப் பிரசாரப் பாடல் அடங்கிய குறுந்தகட்டை மாநகராட்சிக் கல்வி அலுவலர் மூலமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கிட ஆணையர் உத்தரவிட்டார்.
     இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், பள்ளித் தாளாளர் ஜி.செல்வராஜ், முதல்வர் கீதா கோபிநாத், பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai