Enable Javscript for better performance
பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்: பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர்- Dinamani

சுடச்சுட

    

    பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்: பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வோ அறிவுறுத்தியுள்ளார்.
     பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வோ தலைமையில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
     இதில், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வோ பேசியதாவது:
     பேரிடர் காலங்களில் மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை முன்கூட்டியே அறிந்து, தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் வகையில் வாய்க்கால்களைக் சீரமைத்து, தயார் நிலையில் வைக்கவேண்டும்.
     நீர் ஓடைப் பகுதிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைத் தன்மை குறித்து கண்காணிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் திடீரெனத் தண்ணீர் தேங்கும்பட்சத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் படகுகள் போன்ற பாதுகாப்பான உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீ விபத்து, நிலச் சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் பொதுமக்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும். தாலுகா அளவில் அனைத்துத் துறை அலுவலர்களைக் கொண்டு பேரிடர் ஆய்வுக் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.
     நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுகாதாரத் துறை மூலமாக மருத்துவக் குழுவைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி அனைத்துத் துறை அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai