Enable Javscript for better performance
மக்கள் நலக் கூட்டணி சார்பில் அக்.17, 18-இல் ரயில் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் அக்டோபர் 17, 18-ஆம் தேதி கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
     கோவை காந்திபுரத்தில் உள்ள மதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமையில் மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
     மத்திய அரசின் ஒருதலைபட்சமான இந்த நடவடிக்கையைக் கண்டித்து மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
     அதன் ஒரு பகுதியாக கோவையில், மக்கள் நல கூட்டணி சார்பில் அக்டோபர் 17-ஆம் தேதி கோவை ரயில் நிலையத்திலும், 18-ஆம் தேதி பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களிலும் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஜோ.இலக்கியன், நிலா மணிமாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பி.இளங்கோவன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திருமலைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai